அமைத்தோம் உன் ஆலயத்தை
வியத்தகு சிற்பங்கள் செதுக்கினோம்
அன்னதான மடம் சமைத்தோம்
மீண்டும் வானை முட்டும் கோபுரங்கள்
நாலாதிக்கும் நிறுவினோம்.
ஓன்றுக்கு மூன்று சித்திரத் தேர் செதுக்கினோம்
ஓன்றுக்கு மூன்று சித்திரத் தேர் செதுக்கினோம்
என்ன குறைவிட்டோம் பிள்ளையாரே
உனக்கு என்ன குறை விட்டோம்??
பிள்ளையாரப்பா எங்கள் பிள்ளையாரப்பா
பிள்ளையாரப்பா எங்கள் பிள்ளையாரப்பா
நம்பியவருக்கு உன் திருவருளைக்
கொழிக்கும் சேகரனப்பா....
கொழிக்கும் சேகரனப்பா....
உன்னிடம் அருள் பெறுவது கடினமப்பா
அருள் பெற்றால் , பெற்றவனை
அசைப்பது கடினமப்பா..
என்றே எல்லா வாய்களும் முனுமுனுக்கின்றன.
கற்பூரச்சட்டிகளுடன் பெண்களின் வேண்டுதல்களோ
காத்திருக்கின்றன உன்வரவுக்காய்.
மணியோசை கேட்குதம்மா பாடலை
தினம்தினம் கேட்டவன்
தினம்தினம் கேட்டவன்
ஏங்கித் தவிக்கின்றான் உன் மணியோசைக்காய்.
நாடுவிட்டு நாடு சென்றவன்
உன்திருவிழாவை
உன்திருவிழாவை
ஒரு கணம் எண்ணிப்பார்க்கின்றான்.
பிள்ளையாரப்பா எங்கள் பிள்ளையாரப்பா...
அங்கப்பிரதட்டை செய்பவனின்
வேண்டுதலை பார்த்தாயா?
வேண்டுதலை பார்த்தாயா?
அடியடிக்கும் பெண்களின் நேர்த்திகளைக்
கேட்டாயா....?
முள்ளுக்காவடிகள் சகிதம் வரும் அன்பர்கள்
உனக்கத் தெரியவில்லையா ...?
உனைத் தோள் மீது சுமக்கும் இளைஞரின்
ஏனையா இவளவு தாமதமாய்..
ஒருபடி இறங்கி வாவனையா...
உன் அருட்கடாட்சத்தை ஒரு கணம்
காட்டனையா..
உன் அன்னதானச் சோறு எமக்கு அக மருந்தப்பா..
உன் வசந்த மண்டபப் பூசையோ
அல்லற்படும் மனத்திற்கு ஆறுதலப்பா...
பேரிகை முளக்கமும் மேளதாளங்களும்
பக்தி மடல் சொட்டும் வாத்தியங்களப்பா...
வகைவகையான வாகனங்களில் உன் காட்சி
என்றுமே கிடைக்காத அருட்பேறப்பா...
எத்துயர் நேகினும் எம் உணர்வுகளை
உனதடிக்கே சமர்ப்பித்து இராப்பகலாய்
உளைக்கின்றோம்-எம் உறவுகள்
முன்னேற
திரைகடல் ஓடி திரவியம் தேட
வெளியில் சென்ற நாம்
இப்போ வெள்ளைக்காரனையே
வேலைவாங்கும் இளவுக்கு வந்திட்டோம்
உனதருளால்..
பிள்ளையாரப்பா எங்கள் பிள்ளையாரப்பா
உனை என்றுமே மறவாத அடியாரப்பா..
பரராசசேகரன் ஆடி ஆடி வருவான்- தேரில்
ஓடி ஓடி வருவான்-அல்லற்படும்
மக்களின் துயர்துடைக்க
வாருங்கள் நாமும் வடம் பிடிப்போம்
நாடு செளிக்க...
பன்னிருநாள் திருவிழாவைப் பஞ்சமுகனோடு
கொண்டாட -வாருங்கள்
அடியவரே ....வாருங்கள்.
வாருங்கள் நாமும் வடம்பிடிப்போம் ஊர்சிறக்க.
- இணுவை Bala







No comments:
Post a Comment